மும்பை,
உலகக்கோப்பையை வென்றதுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா விடைபெற்று விட்டதால் இந்திய 20 ஓவர் அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. உலகக்கோப்பையில் துணை கேப்டனாக பணியாற்றிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பாண்ட்யாவுக்கு அடிக்கடி உடல்தகுதி பிரச்சினை ஏற்படுவதால் அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிப்பதே சரியாக இருக்கும் என்பது பயிற்சியாளர் கம்பீரின் விருப்பமாக இருந்தது. முடிவில் இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன்ஷிப் 33 வயதான சூர்யகுமார் யாதவிடம் வழங்கப்பட்டது. துணை கேப்டன் பதவியும் பாண்ட்யாவிடம் இருந்து பறிக்கப்பட்டு இருக்கிறது. சுப்மன் கில் இனி துணை கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெகு விரைவில் பாண்ட்யா இந்திய அணியின் கேப்டனாக மாறும் வாய்ப்பு இருப்பதாக பிரபல கிரிக்கெட் விமர்சகரான ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "ஹர்திக் பாண்ட்யா தற்போது எல்லா விதமான வெள்ளை பந்து போட்டிகளிலும் விளையாடும் படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார். அவருக்கு இந்திய அணியின் கேப்டன் பதவிக்கான கதவுகள் இன்னும் திறந்தே இருக்கின்றன. அதற்கு அவர் முழு உடற்தகுதியுடன் இனிவரும் அனைத்து தொடர்களிலும் தொடர்ச்சியாக விளையாடினால் நிச்சயம் அவருக்கு மீண்டும் கேப்டன்சி வாய்ப்பு கிடைக்கும்.
தற்போதைக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக சோதனை கட்டத்தில்தான் இருக்கிறார். அவர் நிரந்தர கேப்டனாக செயல்படுவாரா என்றால் அது நிலையல்ல. எனவே நிச்சயம் பாண்ட்யா இனிவரும் தொடர்களில் தொடர்ச்சியாக விளையாடி தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் பட்சத்தில் அவருக்கு கேப்டன்சி வாய்ப்பு தேடி வரும்" என்று கூறினார்.
from Tamil News: Today Tamil News Paper - Latest Breaking Tamil News https://ift.tt/AKLBOrD
via IFTTT
0 Comments