செய்திகள்

சனா,

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹூடைடா, ஹஜ்ஹா, டைஸ் ஆகிய நகரங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பலரது வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

இந்நிலையில், ஏமனில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 30 உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். அதேவேளை வெள்ளத்தில் சிக்கிய பலரும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கனமழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.    



from தினத்தந்தி - Tamil News Paper | Latest Breaking Tamil News | Today's Tamil News https://ift.tt/BqxYuD2
via IFTTT

Post a Comment

0 Comments