செய்திகள்

சென்னை,

நடிகர் விமல் 'மன்னர் வகையறா' என்ற திரைப்படத்தை தனது ஏ3வி தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து நடித்திருந்தார். இந்த படத்தை தயாரிப்பதற்காக கோபி என்பவரிடம் விமல் ரூ.5 கோடி கடன் வாங்கியுள்ளார். இதில் ரூ.3.6 கோடியை குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்துள்ளார். இருப்பினும், பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, ரூ.3.6 கோடியை 18 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த நடிகர் விமலுக்கு உத்தரவிட வேண்டும் என கோபி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விமல் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், கடன் தொகையை 18 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க நடிகர் விமலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.



from Tamil News: Today Tamil News Paper - Latest Breaking Tamil News https://ift.tt/4g9LXow
via IFTTT

Post a Comment

0 Comments