செய்திகள்

 பெங்களூரு ,

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது.இந்த தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி, சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., ஈஸ்ட் பெங்கால், எப்.சி. கோவா, ஐதராபாத், ஜாம்ஷெட்பூர், கேரளா பிளாஸ்டர்ஸ், மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட், நார்த் ஈஸ்ட் யுனைடெட், ஒடிசா எப்.சி., பஞ்சாப் எப்.சி. மற்றும் புதிய வரவான முகமைதன் ஸ்போர்ட்டிங் கிளப் என 13 அணிகள் பங்கற்றுள்ளன

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் அந்த அணியின் வினித் வெங்கடேஷ் கோல் அடித்தார்.

இதனால் பெங்களூரு அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து பதில் கோல் அடிக்க ஈஸ்ட் பெங்கால் அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் 1-0 என பெங்களூரு வெற்றி பெற்றது. 



from Tamil News: Today Tamil News Paper - Latest Breaking Tamil News https://ift.tt/mBsnOgW
via IFTTT

Post a Comment

0 Comments