செய்திகள்

சென்னை,

ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய அணி ஸ்லோவோனியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா தரப்பில் குகேஷ் மற்றும் அர்ஜூன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதன் மூலம் இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. அதேபோல, பெண்கள் பிரிவிலும் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"இந்தியா தொடர்ந்து உயர்ந்து பிரகாசிக்கிறது! 45வது பிடே செஸ் ஒலிம்பியாட் 2024-ல் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. நமது செஸ் சாம்பியன்களின் அயராத அர்ப்பணிப்பு, எல்லைகளைத் தாண்டி, உலக அரங்கில் தேசத்திற்குப் பெருமை சேர்த்ததைக் காண்பது மனதிற்கு இதமாக இருக்கிறது. இந்த வரலாற்று சாதனைக்காக இந்திய அணிக்கு வாழ்த்துகள்!" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



from Tamil News: Today Tamil News Paper - Latest Breaking Tamil News https://ift.tt/kFz8qUL
via IFTTT

Post a Comment

0 Comments