செய்திகள்

பெங்களூரு,

கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது25). இவர் கேரள மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கிருஷ்ணமூர்த்தி மாதந்தோறும் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வருவது வழக்கம் ஆகும். இந்தநிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்தி தனது கிராமத்திற்கு வந்தார்.

அங்கு நண்பர்களுடன் கிருஷ்ணமூர்த்தி மதுகுடித்துள்ளார். அப்போது அந்த வழியாக அதேப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி வந்தார். அவளை பார்த்த கிருஷ்ணமூர்த்தி பின்னால் சென்றுள்ளார். இதனை கவனித்த சிறுமி அங்கிருந்து வீட்டிற்கு தப்பி சென்றார். மறுநாள் காலை அந்த சிறுமி, தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த கிருஷ்ணமூர்த்தி சிறுமியின் வீட்டிற்குள் புகுந்துள்ளார். 

கிருஷ்ணமூர்த்தியை சிறுமி கத்தி கூச்சலிட்டவாறு வீட்டிற்குள் சென்றார். ஆனால் மதுபோதையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி,  சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து தப்பி சென்றார். தனக்கு நடந்த கொடுமைகளை தனது பெற்றோரிடம் கூறினார். இதனை கேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கே.ஆர்.எஸ். போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 



from தினத்தந்தி செய்திகள் | Tamil News | Tamil News Paper | Today News in Tamil | Live Tamil News https://ift.tt/wVd8y3q
via IFTTT

Post a Comment

0 Comments