மதுரை,
மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள கரடிபட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் அங்காளஈஸ்வரி (13 வயது). இவர் வடபழஞ்சி அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை விஷப்பாம்பு கடித்தது. உயிருக்கு போராடிய அங்காளஈஸ்வரியை குடும்பத்தினர் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அங்காளஈஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
from தினத்தந்தி செய்திகள் | Tamil News | Tamil News Paper | Today News in Tamil | Live Tamil News https://ift.tt/cDGRnA1
via IFTTT
0 Comments