ராஜ்கிர்,
8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென் கொரியா சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இதில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் மலேசியாவை வீழ்த்தியது. இதனையடுத்து இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் தென் கொரியாவுடன் இன்று மோதியது.
சம பலத்துடன் இரு அணிகளும் மல்லுக்கட்டியதால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. இந்தியா தரப்பில் தீபிகா 2 கோல்களும், சங்கீதா குமாரி ஒரு கோலும் அடித்தனர்.
from தினத்தந்தி செய்திகள் | Tamil News | Tamil News Paper | Today News in Tamil | Live Tamil News https://ift.tt/adg1n0H
via IFTTT
0 Comments