செய்திகள்

ஜார்ஜ் டவுன்,

பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகளுக்கான அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். முதல் நாடாக நைஜீரியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரை சந்தித்தார். நைஜீரியா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதனை தொடர்ந்து பிரேசில் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கயானா சென்றார்.

கயானா தலைநகர் ஜார்ஜ் டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், தலைநகர் ஜார்ஜ் டவுனில் கயானா அதிபர் முகமது இர்பானுடன் சேர்ந்து பிரதமர் மோடி மரக்கன்று நட்டார்.



from Today Tamil News Live Updates | தமிழ் செய்தி | Latest Tamil News Online | Tamil News Paper | தமிழ் நியூஸ் https://ift.tt/nYvbtXH
via IFTTT

Post a Comment

0 Comments