செய்திகள்

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் 'விடாமுயற்சி' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரில் எல்லாமும் எல்லோரும் கைவிடும்போது உன்னை நம்பு.... என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். டீசர் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 



from Latest Tamil News Online | Today News Headlines in Tamil | தமிழ் செய்தி | Tamil News Paper | தமிழ் நியூஸ் https://ift.tt/OtTWYkN
via IFTTT

Post a Comment

0 Comments