சென்சூரியன்,
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக பே டன்னிக்லிப் மற்றும் அன்னேக் போஷ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அன்னேக் போஷ் ரன் எடுக்காமலும், பே டன்னிக்லிப் 1 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து அன்னரி டெர்க்சன் மற்றும் சுனே லூஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.
இதில் அன்னரி டெர்க்சன் 19 ரன்னிலும், சுனே லூஸ் 21 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய சோலி ட்ரையான் 1 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய நொந்துமிசோ ஷங்கசே மற்றும் நாடின் டி கிளர்க் இருவரும் சிறிது நேரம் பொறுமையாக ஆடினர். இதில் நாடின் டி கிளர்க் 19 ரன்னிலும், நொந்துமிசோ ஷங்கசே 31 ரன்னிலும் அவுட் ஆகினர்.
தொடர்ந்து களம் இறங்கிய சினாலோ ஜாப்டா 4 ரன்னிலும், எலிஸ்-மாரி மார்க்ஸ் 12 ரன்னிலும், அயன்டா ஹ்லுபி 7 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 124 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து தரப்பில் சார்லோட் டீன் 3 விக்கெட்டும், லாரன் பெல் 2 விக்கெட்டும், லாரன் பைலர், ப்ரீயா கெம்ப், சோபி எக்லெஸ்டோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 125 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து ஆட உள்ளது.
from Latest Tamil News Online | Today News Headlines in Tamil | தமிழ் செய்தி | Tamil News Paper | தமிழ் நியூஸ் https://ift.tt/sEKlWdy
via IFTTT
0 Comments