சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி-திண்டுக்கல் வழித்தட பராமரிப்பு பணி காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671) திருச்சி - மதுரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திருச்சியில் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வரும் 28, 31 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672), அதற்கு மாற்றாக திருச்சியில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும். மதுரையில் இருந்து வரும் நாளை (சனிக்கிழமை) மற்றும் 17 ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672), அதற்கு மாற்றாக மதுரையில் இருந்து மதியம் 3.30 மணிக்கு (30 நிமிடம் தாமதம்) புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
from Latest Tamil News Online | Today News Headlines in Tamil | தமிழ் செய்தி | Tamil News Paper | தமிழ் நியூஸ் https://ift.tt/dXszuBq
via IFTTT
0 Comments