சென்னை,
ஆவின் மேலாண்மை இயக்குனர் வினித் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆவின் நிறுவனம் அவ்வப்போது புது வகையான பால் மற்றும் பால் பொருட்களை ஆராய்ந்து பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் ஆவின் பால் விற்பனை அனைத்து நகர வெளிப்புறப் பகுதிகளை விரிவாக்கம் செய்யும் வகையில் சுமார் 2 லட்சம் லிட்டர் பால் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
வெளிப்புற பகுதிகளில் சில்லரை விற்பனையாளர்களின் குளிர்சாதன செலவினங்களை கருத்தில் கொண்டு மேலும் தற்போது குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இடையே வைட்டமின் ஏ மற்றும் டி சத்து குறைபாடு உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
அதற்கு ஏற்றவாறு 4.5 சதவீதம் கொழுப்பு சத்து மற்றும் 9 சதவீத இதர சத்துக்களுடன் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட 'கிரீன் மேஜிக் பிளஸ்' என்ற புதிய வகையான பால் சில்லரை விற்பனையாளர்களுக்கு சற்று அதிக கமிஷனுடன் சில ஒன்றியங்களில் மட்டும் குறைந்த அளவில் உற்பத்தி செய்து அதனுடைய சந்தையை கண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் சில்லரை தட்டுப்பாடு காரணமாக 450 மில்லி லிட்டர் ரூ.25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான பாலின் விற்பனை அளவையும் குறைக்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
from Latest Tamil News Online | Today News Headlines in Tamil | தமிழ் செய்தி | Tamil News Paper | தமிழ் நியூஸ் https://ift.tt/kEMCPFq
via IFTTT
0 Comments