கோவை,
தெற்கு ரெயில்வே மூலம் இயக்கப்படும் விரைவு ரெயில்களில் பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு எல்.எச்.பி. என்ற ஜெர்மன் தொழில்நுட்ப வடிவமைப்புடன் நவீன ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. இந்தபெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது. அதிர்வு இல்லாமல் பாதுகாப்பாகவும், வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. மேலும் சொகுசு இருக்கைகள், செல்போன் சார்ஜிங் வசதி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். எல்.எச்.பி.2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் 80 இடங்களும், ஏ.சி. பெட்டியில் தூங்கும் வசதி கொண்ட 72 இடங்களும் இருக்கும்.
ஏற்கனவே பல்வேறு முக்கிய விரைவு ரெயில்களில் எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. அதன்படி கோவை- தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு வாராந்திர ரெயிலில் எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாம்பரம்-கோவை இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு வாராந்திர ரெயில் (எண்:-06184) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எல்.எச்.பி. பெட்டி இணைக்கப்பட்டு இயங்கும். அதுபோன்று மறுமார்க்கமாக கோவை-தாம்பரம் சிறப்பு வாராந்திர ரெயில் (எண்:- 06185) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
from Latest Tamil News Online | Today News Headlines in Tamil | தமிழ் செய்தி | Tamil News Paper | தமிழ் நியூஸ் https://ift.tt/DfRliY1
via IFTTT
0 Comments