செய்திகள்

அமிர்தசரஸ்,

பஞ்சாப்பில் எல்லை பாதுகாப்பு படை மற்றும் பஞ்சாப் போலீசார் கூட்டாக இணைந்து எல்லை பகுதியில் ஊடுருவல் மற்றும் கடத்தல் முயற்சிகளை முறியடிக்கும் வகையில், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உத்தர் தரிவால் கிராமத்தில் வயல்வெளி ஒன்றில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் ஒன்று போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது.

டி.ஜே.ஐ. மேவிக் 3 கிளாசிக் ரக ஆளில்லா விமானம், உடைந்த நிலையில் இன்று மாலை 6 மணியளவில் கைப்பற்றப்பட்டு உள்ளது. படையினர் பஞ்சாப் போலீசாருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் முயற்சிகளின் ஒரு பகுதியாக, நேற்று மற்றொரு ஆளில்லா விமானம் மற்றும் ஹெராயின் போதை பொருள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது.

இதே அமிர்தசரஸ் மாவட்டத்தில் பச்சிவிந்த் கிராமத்தில் வயல்வெளியில் இருந்து 460 கிராம் எடை கொண்ட ஹெராயினை போலீசார் கைப்பற்றினர். இதேபோன்று, தார்ன் தரன் மாவட்டத்தில் கெம்கரண் கிராமத்தில் வயல்வெளி ஒன்றில் இருந்து டி.ஜே.ஐ. மேவிக் 3 கிளாசிக் ரக ஆளில்லா விமானம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதனால், எல்லை பகுதியில் சட்டவிரோத ஆளில்லா விமானம் ஊடுருவல் மற்றும் கடத்தல் முயற்சியானது முறியடிக்கப்பட்டு உள்ளது என அதுபற்றி எல்லை பாதுகாப்பு படை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.



from தமிழ் செய்திகள், Tamil news, தமிழ் செய்திகள் இன்று லைவ், Tamil news paper, Latest tamil news live, Tamil news online | Daily Thanthi https://ift.tt/nMSHOr3
via IFTTT

Post a Comment

0 Comments