செய்திகள்

மெல்போர்ன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், பிரேசிலின் ஜோவோ பொன்சேகா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரூப்லெவ் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 6-7 (1-7), 3-6, 6-7 (5-7) என்ற செட் கணக்கில் ஜோவோ பொன்சேகாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.



from தமிழ் செய்திகள், Tamil news, Tamil news paper, Latest tamil news live, Today Tamil breaking news online | Daily Thanthi https://ift.tt/GlkKsxM
via IFTTT

Post a Comment

0 Comments