சென்னை,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இதனையடுத்து 2-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் 2ஆவது டி20 போட்டியை காண வரும் ரசிகர்களும், போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பும் ரசிகர்களும் மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் சேவையை பார்வையாளர்கள் இலவசமாகப் பயன்படுத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2ஆவது டி20 போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்போர், இதனை பயன்படுத்தி கொள்ளலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
from தமிழ் செய்திகள், Tamil news, Tamil news paper, Latest tamil news live, Today Tamil breaking news online | Daily Thanthi https://ift.tt/JBxrTdc
via IFTTT
0 Comments