இதழ்களின் இளவரசி இயற்கையின் வனப்பில்
சிவப்பு ரோஜாக்கள் சிரித்திடும் அழகு.
மலைகளின் ராணித் தலையில் பூக்களின் ராணியின் புன்னகை பூக்கும் பொன்னெழில் தோற்றம்.
காதலின் பரிசு காத்து கிடக்கிறது
ரோஜா பூந்தோட்டத்தில்.
பறிக்காமல் இருக்கும் பூரணத் தோற்றம் கண்ணைப் பறிக்கிறது.
நீ மலர்ந்து சிரிப்பதால் தோட்டக்காரன் மனதிலும் மத்தாப்புச் சிரிப்பு சிதறுமே.
அந்தியூர் மைந்தன் மா.செங்கோடன்
0 Comments