மனதில் விதைத்த விதை.



 மனதில் விதைத்த விதை.


மனதில் விதைத்த விதை விருட்சமாக
தினமும் செயல்நீரை பாய்ச்ச வேண்டும்.
நல்உரமாக எண்ணத்தைத் தெளிக்க வேண்டும்.
வன்மையாய் வேலியமைத்துக் காக்க வேண்டும்.
தளிராய் இருக்கும்போது தாக்கும் நோய்களை
வலி ஏற்படாது வழி செய்ய வேண்டும்.
காய்க்கும் பருவத்தே கல்லடி படாமல்
சேய் காப்பது போல் காக்க வேண்டும்.
அறுவடைக்குப் பின்னே அவசியம் வர்த்தகம்.
பெருவிலைக்குப் போட்டியிட்டால் போட்ட முதல் வந்தடையும்.
சிறுவிலையென்று சிறுத்திட்டால்
சிறுத்துவிடும் வாழ்வும்.
உறுத்துக்கொண்டே இருக்கும்
உழவனின் மனமும்.
மண்ணில் போட்ட மரத்து விதையும் 
மனதில் போட்ட எண்ண விதையும்
குணத்தில் ஒன்றே குறிப்பாய் உணர்ந்து
மணப்பாய் மாநிலத்தில் மணம் வீசியே.
அந்தியூர் மைந்தன் மா.செங்கோடன்.

Post a Comment

0 Comments