செய்திகள்

புதுடெல்லி,

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மியை தோற்கடித்து பா.ஜனதா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 26 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக இந்த தேர்தலிலும் ஓரிடத்திலும் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகளை ஏற்பதாக கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது, "டெல்லி தேர்தல் முடிவுகளை பணிவுடன் ஏற்கிறோம். தேர்தலில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய கட்சித்தொண்டர்களுக்கும், வாக்களித்து ஆதரித்த வாக்காளர்களுக்கும் இதயப்பூர்வ நன்றிகள்' டெல்லியின் வளர்ச்சிக்காகவும், மாசுபாடு, விலைவாசி உயர்வு மற்றும் ஊழலுக்கு எதிராகவும், தலைநகர் மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடுவோம்."

இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்து உள்ளார். 



from Tamil News | தமிழ் செய்திகள் | Latest Tamil News Online | Today News In Tamil | Tamil News Live - Daily Thanthi | Tamil News Paper | Breaking Tamil news | தமிழ் செய்தி | தமிழ் நியூஸ் https://ift.tt/ZdPvU26
via IFTTT

Post a Comment

0 Comments