செய்திகள்

ரெய்காவிக்,

ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இவரது அமைச்சரவையில் குழந்தைகள் நலத்துறை மந்திரியாக இருந்தவர் ஆஸ்தில்டர் லோவா தோர்ஸ்டாட்டிர் (வயது 58). சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் தனது சிறுவயது அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.

அப்போது தனது 22 வயதில் 16 வயது மாணவர் ஒருவருடன் உறவு வைத்துக் கொண்டு ஒரு குழந்தை பெற்றதாக கூறினார். மந்திரி பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து பிரதமர் கிறிஸ்ட்ரூன் அவரை அலுவலகத்துக்கு வரழைத்து பேசினார். இதன்பிறகு ஆஸ்தில்டர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.



from Daily Thathi: Tamil News | Today News in Tamil | Tamil News Paper | Latest and Breaking Headlines News in Tamil | தமிழ் செய்திகள் | தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | Tamil News Online https://ift.tt/xGJkg3b
via IFTTT

Post a Comment

0 Comments