செய்திகள்

கீவ்,

ரஷியா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அமெரிக்க முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷியா, உக்ரைன் ஆகிய இருநாடுகளுமே சம்மதம் தெரிவித்தன. இது தொடர்பாக ரஷியா-உக்ரைன் இடையே இன்று (திங்கட்கிழமை) சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷியா நேற்று சரமாரியாக டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 5 வயது பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.



from Daily Thathi: Tamil News | Today News in Tamil | Tamil News Paper | Latest and Breaking Headlines News in Tamil | தமிழ் செய்திகள் | தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | Tamil News Online https://ift.tt/kWXf0wI
via IFTTT

Post a Comment

0 Comments