
சென்னை ,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.இதில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் மார்ச் 23-ந்தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்சுடன் மோத உள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்குவதை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இளம் வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சிஎஸ்கே அணி வீரர்களுடன் ராகுல் திரிபாதி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராகுல் திரிபாதியை வாங்கியது. இதற்கு முன்பு அவர் ஐதராபாத் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
from Tamil News Live | Latest Tamil News Online | Today News In Tamil | Tamil News Paper | Breaking Tamil news | தமிழ் தமிழ் செய்திகள் | தமிழ் நியூஸ் https://ift.tt/KvUMVZD
via IFTTT
0 Comments