
சென்னை,
டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னையில் பல இடங்களில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 110 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து போராட்டம் செய்ய முயன்றபோது அண்ணாமலை கைது செய்யப்பட்டார். மாலை 6 மணிக்கு விடுவிக்கவில்லை என கூறி காவல் துறையினரிடம் அண்ணாமலை வாக்குவாதம் செய்தார். அண்ணாமலையுடன் கைதான மற்றவர்களும் 7 மணிக்கு விடுவிக்கப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பேசிய அண்ணாமலை, காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். இனி எந்த ஆர்ப்பாட்டத்திற்கும் அனுமதி கேட்டு காவல்துறையிடம் கடிதம் கொடுக்க மாட்டோம்.
காவல்துறை ஏவல் துறையாக மாறியுள்ளதால், அடுத்த ஒரு வாரத்திற்குள் 2 போராட்டம் நடத்தப்படும். ஒன்று, டாஸ்மாக்கில் உள்ள எல்லா கடைகளிலும் பாஜக பெண் தொண்டர்கள் முதல்வரின் பிரேம் போட்ட புகைப்படத்தை ஆணி அடித்து ஒட்ட போகிறோம். இன்னொரு போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள எல்லா டாஸ்மாக்குகளுக்கும் பூட்டு போட்டு போராடுவோம். காவல்துறை முடிந்தால் எங்களை தடுத்து பார்க்கட்டும். இன்று இரவில் இருந்து காவல் துறையினருக்கு தூக்கம் இருக்காது என்றார்.
from Tamil News Live | Today News In Tamil | Tamil News Paper | Latest and Breaking Headlines News in Tamil | தமிழ் தமிழ் செய்திகள் | தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | இன்றைய தலைப்புச் செய்திகள் https://ift.tt/e1YWdzo
via IFTTT
0 Comments