செய்திகள்

சென்னை,

2020ம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளார். படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளன. இப்படத்தின் பூஜை விழா நாளை சென்னையில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் 'மூக்குத்தி அம்மன் 2' படத்திற்கு வாழ்த்து கூறி இருக்கிறார். ரஜினிகாந்தை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது தொடர்பான வீடியோவை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பகிர்ந்துள்ளார்.



from Tamil News Live | Today News In Tamil | Tamil News Paper | Latest and Breaking news in Tamil | தமிழ் தமிழ் செய்திகள் | தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | இன்றைய தலைப்புச் செய்திகள் https://ift.tt/3Z8c7KL
via IFTTT

Post a Comment

0 Comments