
சேலம்,
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள மாமுண்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 40), கூலித்தொழிலாளி. இவர் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் தங்கி விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ந் தேதி 12 வயதுடைய 8-ம் வகுப்பு படித்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து அந்த சிறுமியின் தந்தை தம்மம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக குமாருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.
from Daily Thathi: Tamil News | Today News in Tamil | Tamil News Paper | Latest and Breaking Headlines News in Tamil | தமிழ் செய்திகள் | தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | Tamil News Online https://ift.tt/EyUDcpt
via IFTTT
0 Comments