
புதுடெல்லி,
அந்தமான் கடல் பகுதியில் இன்று மாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மாலை 6.12 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடலில் 70 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 5.75 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.92 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
from Tamil News Live | Today News In Tamil | Tamil News Paper | Latest and Breaking news in Tamil | தமிழ் தமிழ் செய்திகள் | தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | இன்றைய தலைப்புச் செய்திகள் https://ift.tt/MAkRrW0
via IFTTT
0 Comments