
ஐதராபாத்,
ஆந்திர பிரதசேம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் உள்ள கைலாசப்பட்டினத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில், 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
"ஆந்திராவின் அனகாப்பள்ளி மாவட்டத்தில் நடந்த தொழிற்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்."
from DailyThanthi: Tamil News | Today News in Tamil | Tamil News Paper | Latest and Breaking Headlines News in Tamil | தமிழ் செய்திகள் | தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | Tamil News Online https://ift.tt/E6tmeJY
via IFTTT
0 Comments