
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் தற்போது கமல்ஹாசனை வைத்து தக் லைப் படத்தை இயக்கிள்ளார். இதில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தையடுத்து இயக்குனர் மணிரத்னம், ஒரு காதல் கதையை இயக்க உள்ளார். அதில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிக்க பிரபல நடிகை ருக்மணி வசந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ருக்மணி வசந்த் விஜய் சேதுபதியுடன் இணைந்து 'ஏஸ்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற 23-ந் தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'மதராஸி' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

from தினத்தந்தி தமிழ் செய்திகள்: Tamil News, Latest Tamil News, Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/5ebvrBi
via IFTTT
0 Comments