செய்திகள்

லக்னோ,

ஐ.பி.எல். தொடரில் இன்று லக்னோவில் நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் காயம் காரணமாக இம்பேக்ட் வீரராக களமிறங்கினார். அதனால் கேப்டன் பொறுப்பு ஜிதேஷ் சர்மா வழங்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஜிதேஷ் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 94 ரன்கள் குவித்தார். பெங்களூரு தரப்பில் ஷெப்பர்டு 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் - விராட் கோலி களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் விராட் கோலி 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மயங்க் அகர்வால் 11 ரன்களில் ஏமாற்றினார். சிறிது நேரத்திலேயே பில் சால்ட் 62 ரன்களில் அவுட்டானார்.

அடுத்து வந்த வீரர்களில் ரஜத் படிதார் 18 ரன்களிலும், ஷெப்பர்டு முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மிடில் ஓவர்களில் பெங்களூரு அணி விக்கெட்டுகளை தாரை வார்த்தது. ஜிதேஷ் சர்மா 24 ரன்களிலும், டிம் டேவிட் ஒரு ரன்னிலும் நடையை கட்டினர்.

19.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த பெங்களூரு அணி 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஐதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும், எஷான் மலிங்கா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 



from தினத்தந்தி தமிழ் செய்திகள்: Tamil News, Latest Tamil News, Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/3OyjkbP
via IFTTT

Post a Comment

0 Comments