செய்திகள்

துபாய்,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வளைகுடா நாடுகளில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதில் முதலாவதாக நேற்று சவுதி அரேபியாவுக்கு வருகை புரிந்தார். தொடர்ந்து முக்கிய கூட்டங்களில் கலந்துகொண்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து இன்று மாலை அவர் சவுதி அரேபியாவில் இருந்து கத்தார் நாட்டுக்கு சென்றார். அங்கு அந்நாட்டின் அமீர் (ஆட்சியாளர்) ஷேக் தமிம் பின் ஹமத் பின் கலீபா அல் தானியை சந்தித்து பேசினார். நாளை அவர் அமீரகம் செல்ல இருக்கிறார்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மகள் இவான்கா ஆகியோரின் முகங்களை வைத்து செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் மூலமாக அரபு பாரம்பரிய உடைகளுடன் உருவாக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை சவுதி அரேபியாவில் உருவாக்கி உள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அரபு மக்களின் உயர்ந்த விருந்தோம்பலின் அடையாளமாக இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அரபு பாரம்பரிய உடையில் கழுத்தில் பட்டன்கள் கொண்ட வெள்ளை கந்தூர அணிந்துள்ளார். சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான துணியை தலையில் போர்த்தி, கருப்பு கயிற்றால் செய்யப்பட்ட அகல் தலையில் வைத்திருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அவரது மகள் இவான்கா கருப்பு நிறத்திலான அபாயா எனப்படும் அரபு பெண்கள் அணியக்கூடிய உடையை அணிந்து அரபு நாட்டின் காவா (காபி) பானம் குடிப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.



from தினத்தந்தி தமிழ் செய்திகள் | Tamil News | Latest News in Tamil | தமிழ் நியூஸ், Tamil News Online, Today News in Tamil, Tamil Newspaper https://ift.tt/ujosPQ2
via IFTTT

Post a Comment

0 Comments