
சென்னை,
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திருச்செந்தூர் முருகன் கோவில் திகழ்கிறது. உலகப் புகழ்பெற்ற இந்த கோவிலில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. வரும் ஜூன்7-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஜூன் 7-ந்தேதி நடைபெறவுள்ள திருச்செந்தூர் முருகன் கோவில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு கூட்டம் நடத்தினார். பக்தர்களுக்கான வசதிகள், முருகன் பெருமைகளை விளக்கும் கண்காட்சி அமைத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:-
"திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக அமைக்கப்படும் குழுக்களில் இடம்பெறும் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் தங்களது பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். அரசுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கும்பாபிஷேக நிகழ்வுகளை நடத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/SCE6fwk
via IFTTT
0 Comments