
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், அரியானா மற்றும் சண்டிகர் ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 'ஆபரேஷன் ஷீல்டு' நடவடிக்கையின் கீழ், பொது பாதுகாப்பு பயிற்சிகளின் ஒரு பகுதியாக இன்று போர்க்கால ஒத்திகை நடத்தப்பட்டது.
இந்த ஒத்திகையின்போது வான்வழி தாக்குதல்கள், டிரோன் தாக்குதல்கள் மற்றும் பிற போர்க்கால சூழ்நிலைகளை உருவகப்படுத்தும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னதாக இந்த பயிற்சியை மே 29-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் அதனை ஒத்திவைத்த நிலையில் இன்று இந்த ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஒத்திகையின்போது பல இடங்களில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டது. காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர், அவசர காலத்தில் காயமடைந்தவர்களை மீட்பது தொடர்பான பயிற்சிகளை மேற்கொண்டனர். இதற்கு முன்பாக கடந்த மே 7-ந்தேதி, நாடு முழுவதும் அரசு சார்பில் பல்வேறு இடங்களில் பொது பாதுகாப்பு பயிற்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/yjYQvhq
via IFTTT
0 Comments