
புதுடெல்லி,
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் ஆக்சியம் -4 நான்காவது மனித விண்வெளி பயணம் நாளை மறுநாள் ஜூன் 10ம் தேதி திட்டமிடப்பட இருந்தது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் 3 விண்வெளி வீரர்கள் என மொத்தம் 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், வானிலை காரணமாக ஆக்சியம்-4 விண்கலம் ஏவுவது ஜூன் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நாசா, இஸ்ரோ முயற்சியில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் ஆக்சியம்-4 திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விண்வெளி வீரர் சுக்லாவுடன், அமெரிக்காவை சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன் மற்றும் ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு மற்றும் போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோரும் செல்கின்றனர்.
கடந்த 1984ம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் விண்வெளி பயணத்தில் இணைந்த ராகேஷ் சர்மாவின் வரலாற்று சிறப்புமிக்க விண்வெளி பயணத்திற்கு பின் 41 ஆண்டுகள் கழித்து ஆக்சியம் 4 திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் இரண்டாவது இந்தியர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சுக்லா என்பது குறிப்பிடத்தக்கது.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/NDZoY14
via IFTTT
0 Comments