செய்திகள்

விமான விபத்து:'நினைத்துப்பார்க்க முடியாத இழப்பு' நடிகை பிரியங்கா சோப்ரா வேதனை

புதுடெல்லி,

ஆமதாபாத் விமான விபத்து அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி மற்றும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது. விபத்து தொடர்பாக தொடர்ந்து வேதனையை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் பாலிவுட் பிரபலங்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் வெளியிட்டு உள்ளனர்.

அதன்படி பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'மிக மிக சோகம். நினைத்துப்பார்க்க முடியாத இழப்பை எதிர்கொண்டுள்ள குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்' என குறிப்பிட்டு உள்ளார். நடிகர் சல்மான்கான் கூறும்போது, 'ஆமதாபாத் விமான விபத்து குறித்து கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

பயணிகள், பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பிரார்த்தனைகள்' என கூறியுள்ளார். முன்னதாக விபத்தை தொடர்ந்து தான் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி ஒன்றையும் அவர் ரத்து செய்தார். இதைப்போல பல்வேறு திரைப்பிரபலங்கள் விபத்து குறித்து தங்கள் வேதனையை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.



from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/Gj1iQas
via IFTTT

Post a Comment

0 Comments