செய்திகள்

சென்னை,

இசைஞானி இளையராஜா இன்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிறந்த நாளை முன்னிட்டு இளையராஜாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேரிலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் இளையராஜாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இளையராஜாவுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள சீமான் அந்த பதிவில் தெரிவித்திருப்பதாவது, இசை இறைவன். தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு உலக அடையாளம். எங்கள் ஐயா இளையராஜா அவர்களின் பிறந்தநாளையொட்டி, இன்று 02-06-2025 ஐயாவின் சென்னை தி.நகர் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்த இனிய தருணத்தில், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/zNmGpEr
via IFTTT

Post a Comment

0 Comments