செய்திகள்

ஏதென்ஸ்,

கிரீஸ் நாட்டின் வடக்கே ஏதோஸ் மலையில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது. காரியெஸ் நகரில் இருந்து வடமேற்கே மிக குறைந்த ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இதன்படி, நிர்வாக தலைநகரான காரியெஸ் நகரில் இருந்து வடமேற்கே 7.7 மைல்கள் ஆழத்தில் அது மையம் கொண்டிருந்தது. புவியக இயக்கவியலின் ஏதென்ஸ் அமைப்பு வெளியிட்ட செய்தி இதனை தெரிவிக்கின்றது.

இதுபோன்று பூமியின் மேற்பரப்பு அருகே ஏற்படும் நிலநடுக்கங்கள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டவையாகும்.

இதனை தொடர்ந்து, 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றன. எனினும், பாதிப்புகள் எதுவும் உடனடியாக தெரிய வரவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.

கிரீஸ் நாட்டின் புனித மலை என அறியப்படும் இந்த ஏதோஸ் மலை, 1054-ம் ஆண்டில் இருந்து ஆன்மீக மையங்களில் ஒன்றாக உள்ளது. நூறாண்டுகள் பழமையான பல கோவில்களும் இந்த பகுதியில் உள்ளன.



from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/izmtgp6
via IFTTT

Post a Comment

0 Comments