
மதுரை,
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் நிகிதா (வயது 41). இவர் தனது தாயாருடன் சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு காரில் சென்றார். அங்கு காவலாளியாக இருந்த அஜித்குமாரிடம் (28), தனது காரை ஓரமாக நிறுத்துமாறு கூறி சாவியை கொடுத்தார். அதற்கு அவர், தனக்கு கார் ஓட்ட தெரியாது எனக்கூறி வேறு ஒருவர் மூலம் காரை ஓரமாக நிறுத்தினாராம்.
அதன்பின் கோவிலுக்குள் சென்று சாமிதரிசனத்தை முடித்து நிகிதா வெளியில் வந்தார். காவலாளி அஜித்குமாரிடம் இருந்து சாவியை வாங்கி காரை திறந்து பார்த்தார். அப்போது காரில் இருந்த 9½ பவுன் நகை மாயமானதாக கூறி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்த மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டனர். அதன்பேரில் தனிப்படை போலீசார், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் உள்பட சிலரை அழைத்து விசாரித்தனர். பின்னர் அஜித்குமாரை தவிர மற்றவர்களை அனுப்பி வைத்தனர். நகை மாயமானது குறித்து தொடர்ந்து அஜித்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே திடீரென அஜித்குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி அவரை சிவகங்கை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் அவரது உடலை அங்குள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில்,விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞா் உயிரிழந்ததையடுத்து, 6 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.
திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் இளைஞர் உயிரிழந்த வழக்கு, இப்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அஜித் குமாரின் குடும்பத்தினரின் போராட்டத்தையடுத்து இந்த சம்பவத்தில் காவல்துறையைச் சேர்ந்த 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இதனிடையே உடற்கூராய்வில் அஜித் குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் இருந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வலிப்பு ஏற்பட்டு இளைஞர் உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .போலீசாடமிருந்து தப்பிக்க அஜித்குமார் முயற்சித்ததாகவும் அப்போது கீழே விழுந்ததில் அஜித்குமாருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும் இதனாலேயே அஜித்குமார் உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பிலிருந்து உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. உடற்கூராய்வில் அஜித் குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/svnVydK
via IFTTT
0 Comments