
சென்னை,
மதுரை பாண்டிக்கோவில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி நடந்தது. இதை முன்னிட்டு அறுபடை முருகன் கோவில்களின் மாதிரிகள் கண்காட்சியாக அமைக்கப்பட்டு, வழிபாடுகள் அங்கு நடந்து வந்தன. நாள்தோறும் ஏராளமானவர்கள் தரிசித்தார்கள். மாநாட்டு மேடை திருப்பரங்குன்றம் மலையை பின்னணியாக வைத்தும், அதில் முருகப்பெருமான் படத்துடன், அறுபடை வீடுகளின் கோபுரங்களும் இடம்பெறுவது போன்றும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், அண்ணாமலை மீது மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மதுரை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகாரின் அடிப்படையில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், இந்து முன்னணி நிர்வாகி செல்வகுமார்உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத ரீதியாக பேசி பகைமையை உருவாக்குதல், மத உணர்வுகளை புண்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/z1MsnCF
via IFTTT
0 Comments