புதுடெல்லி,
இன்று காலை நடைபயிற்சி சென்றபோது போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதால் அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்-அமைச்சர் மேலும் 3 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட இருப்பதால், தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
இந்த நிலையில் மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்மைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். தொலைபேசியில் வாயிலாக முதல்-அமைச்சரை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/OQbRnIq
via IFTTT
0 Comments