தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு பெயர்போனவர் நடிகர் கிங்காங். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர், நடிகர் ரஜினிகாந்தின் 'அதிசயபிறவி' படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். நடிகர் கிங்காங் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்குத் திருமணமாகி கலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், மகன் ஒருவரும் உள்ளனர்.
நடிகர் கிங்காங் மகள் திருமணம் இன்று நடைபெற்றது. அசோக் பில்லர் பகுதியில் இருக்கும் மஹாலில் திருமணம் நடைபெற்றது.திருமணத்தில் கிங்காங்கின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இந்நிலையில், கிங்காங் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று மாலை நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
அதேபோல், தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/KDW927M
via IFTTT
0 Comments