செய்திகள்

மான்செஸ்டர்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து 669 ரன்களும் அடித்தன.

பின்னர் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் அடித்திருந்தது. சுப்மன் கில் 78 ரன்களுடனும், கே.எல். ராகுல் 87 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து இந்திய அணி 137 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கே.எல்.ராகுல் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 228 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார். சதம் அடித்த சிறிது நேரத்திலேயே சுப்மன் கில் 103 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வாஷிங்டன் சுந்தர் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் டிரா செய்யும் நோக்கில் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். இந்த ஜோடியை பிரிக்க இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் எவ்வளவோ முயன்றும் பலன் கிட்டவில்லை. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் அடுத்தடுத்து சதம் விளாசினர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட முன்னிலை பெற்றது. 143 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 425 ரன்கள் எடுத்த போது ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது.  ஜடேஜா 107 ரன்களிலும் வாஷிங்டன் சுந்தர் 101 ரன்களிலும் களத்தில் இருந்தனர். கடைசி நாளான இன்று இந்திய அணியை சுருட்டி வெற்றியை ருசித்துவிடலாம் என்ற இங்கிலாந்து அணியின் கனவை இந்திய பேட்ஸ்மேன்கள் தவிடுபொடியாக்கினர்.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் தற்பொது அணி இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி வரும்  4 ஆம் தேதி தொடங்குகிறது.



from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/S1hqRj2
via IFTTT

Post a Comment

0 Comments