சென்னை,
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 1,936 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளியிட்டது. இப்பதவிக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடந்தது. இத்தேர்வை 5 லட்சத்து 81,305 பேர் எழுதினர்.
இத்தேர்வுக்கான ரிசல்ட் டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் குரூப் 2ஏ பதவியில் பதவிக்கான மெயின் தேர்வு பிப்ரவரி 8ம் தேதி நடந்தது. இதில் 20,033 பேர் பங்கேற்றனர். தேர்வர்கள் முதன்மை எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மே 5ம் தேதி வெளியிட்டது.
இந்த சூழலில் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற்றது. வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வரை இந்த இந்த சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு நடைபெறுகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 2, 2ஏ தேர்தலில் கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன்படி நகராட்சி ஆணையர், உதவியாளர், சிறைத் துறை நன்னடத்தை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் சேர்க்கப்பட்டது.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாள், நேரத்தில் கலந்து கொள்ள தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்படாது என்றும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/YP927FA
via IFTTT
0 Comments