செய்திகள்

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட இடிந்தகரையை சேர்ந்த சிலுவை அந்தோணி மகன் மரியலாரன்ஸ் (வயது 52) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை முயற்சி, அடிதடி மற்றும் மிரட்டல் போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர், மரியலாரன்ஸ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் மரியலாரன்ஸ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டார். 



from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/faue83H
via IFTTT

Post a Comment

0 Comments