ஆம்ஸ்டர்டாம்,
காசா மீது இஸ்ரேல் தொடுத்த போரில் இதுவரை சுமார் 62 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து தவிக்கின்றனர். எனவே பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு உலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன. ஆனால் போர் நிறுத்த நிபந்தனைகளை ஏற்காவிட்டால் காசா நகரம் முற்றிலும் அழிக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் இஸ்ரேலுக்கு எதிரான கூட்டு பிரகடனத்தில் 21 நாடுகள் கையெழுத்திட்டன. அதில் நெதர்லாந்தும் ஒன்று. எனவே இஸ்ரேலுக்கு எதிரான பொருளாதார தடை விதிப்பதன் அவசியம் குறித்து வெளியுறவு மந்திரி காஸ்பர் வெல்ட்காம்ப் அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்தார். ஆனால் அவரது முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் தான் கட்டுப்படுத்தப்படுவதாக கூறி காஸ்பர் வெல்ட்காம்ப் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/AHSJBNf
via IFTTT
0 Comments