செய்திகள்

நெல்லை,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த தம்புபுரத்தை சேர்ந்தவர் முத்தையா (58). இவர் கடந்த 2022-ல் அப்பகுதியை சேர்ந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றவாளியான முத்தையாவுக்கு 25 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

 



from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/urYzh8J
via IFTTT

Post a Comment

0 Comments