திஸ்பூர்,
அசாம் மாநிலத்தின் சோனித்பூர் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8.40 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.9 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.82 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.81 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. அசாமில் ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு 9.35 மணியளவில் ரிக்டர் 3.8 அளவிலும், நேற்று இரவு 8.23 மணியளவில் ரிக்டர் 2.8 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/24OrxjN
via IFTTT
0 Comments