சென்னை,
தபால் துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சலக வங்கியில் 2018-ம் ஆண்டு முதல் இன்று வரை 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களுக்கான உதவித்தொகை பெறும் கணக்குகளும் இதில் அடங்கும்.
இந்திய அஞ்சலக வங்கியில் செல்போன் வங்கி சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தபால்காரரின் உதவியுடன் வாடிக்கையாளர்கள் தங்களது தபால் வங்கிக்கணக்குகளில் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் அரசின் மானியத்தொகைகளை எளிதாகப் பெற முடியும். அதுமட்டுமின்றி அஞ்சலக வங்கி கணக்குடன் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகளையும் இணைத்து ஆன்லைன் மூலம் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியும்.
மேலும் இந்த செயலி மூலம் செல்வமகள், தங்கமகன், அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிமையான முறையில் ஆன்லைன் வாயிலாகவே பணம் செலுத்த முடியும் என்று பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/J7gceqP
via IFTTT
0 Comments