மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று சென்னை வந்துள்ளார். அவரை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது சினிமா டிக்கெட் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்கக் கோரி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்தனர்.
தற்போதைய நிலவரப்படி சினிமா டிக்கெட் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி வரி ரூ. 100 வரையிலான டிக்கெட்டுகளுக்கு 12 சதவீதமும், ரூ. 100க்கு மேல் உள்ள டிக்கெட்டுகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/FEAyo72
via IFTTT
0 Comments