சென்னை,
தமிழ் திரை இசையை உலக அளவில் புகழ்பெற செய்த இசைஞானி இளையராஜா, திரை இசை உலகில் 50 ஆண்டுகளை கடந்ததையொட்டி அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது."சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50" என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்பட திரைப்பிரபலங்கள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும். இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/KkJgpFV
via IFTTT
0 Comments